வீட்டில் வைத்து சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் பின்புறத்தில் பூத்தொட்டி போல் அமைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீரமணியின் வீட்டில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அங்கே கஞ்சா செடியானது 4 மாதங்களாக வளர்க்கப்பட்டு 5 அடி உயரத்திற்கு வளர்ந்திருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் வீரமணியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வீரமணி இது மூலிகை செடி என்று கூறியுள்ளார். இதனை அடுத்து செடியை சோதனைக்கு உட்படுத்திய பிறகு கஞ்சா செடி என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சா செடியை பறிமுதல் செய்ததோடு வீரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.