அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் கத்தினால் ரூ. 30,000 சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் கொரோனா காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பல இளைஞர்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க வித்தியாசமான முறையில் வேலைவாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. அதாவது தூங்கினால் வேலை, செருப்பு போட்டு நடந்தால் வேலை போன்ற வித்தியாசமான வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகின்றது.
அதுபோல் தற்போது அமெரிக்காவை சேர்ந்த சிசிடிவி நிறுவனம், கொள்ளை திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கவும் நிறுவனத்தை கண்காணிக்கவும் புதுவகையான வேலை ஒன்றை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் அந்நிறுவனத்தின் கொள்ளையர்களால் திருட்டு எதுவும் நடக்க நேர்ந்தால் உடனடியாக கத்தி அனைவரையும் அலர்ட் செய்ய வேண்டும். இந்த வேலைக்கு 399 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் ரூ. 29,644 சம்பளமாக கொடுக்க உள்ளது. இதற்கு பிளஸ் டூ, அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.