Categories
உலக செய்திகள்

மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள்…. வேகமாக பரவி வரும் கொரோனா…. நேரில் சென்று ஆய்வு செய்த ஜனாதிபதி….!!

டெல்டா வகை கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் பிரான்சிலுள்ள ஒரு மாவட்டத்திற்கு அந்நாட்டின் பிரதமர் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் Landes என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் டெல்டா வகை கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் landes மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், அங்கு வசிக்கும் பொதுமக்களில் ஒவ்வொரு 100 பேரிலும் சுமார் 50 பேருக்காவது இந்த டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பிரான்சின் பிரதமர் டெல்டா வகை கொரோனா தொற்றை விரட்டுவதற்கு தேவையான அதிரடி நடவடிக்கையாக சுமார் 7 நாட்கள் landes மாவட்டத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |