Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியாகும் “மேதகு” திரைப்படம்… வெளியான அறிவிப்பு…!!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட மேதகு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது.

இந்த படத்தின் கதையை இயக்குனர் தி. கிட்டு எழுதி இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே தயாராகிவிட்ட இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக உள்ளது. மேலும் இந்தப்படத்தில் குட்டிமணி, ஈஸ்வர் பாஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர், தமிழீழத் திரைக்களம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் பிளாக்ஷிப் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு ரூபாய் 70 கட்டணம் செலுத்த வேண்டும்.

Categories

Tech |