Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை சார் இது… குடும்பத்தினரின் அவல நிலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

50,000 ரூபாய்க்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தை காவல்துறையினர் மீட்டனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பில்லூர் பகுதியில் சங்கையா காளீஸ்வரி தம்பதியினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் இல்லாமல் சங்கையா வீட்டில் வறுமையில் வாழ்ந்துள்ளனர். அப்போது காந்தி என்பவரிடமிருந்து 50,000 ரூபாய் பணத்தை குணசேகரன் என்பவர் பெற்று சங்கையாவிடம் கடனுக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட சங்கையாவுக்கு கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை அமைந்தது. அதனால் கடனை கொடுத்த காந்தி குணசேகரிடம் கடன் தொகையை கேட்டுள்ளார். அப்போது கடன் கொடுக்க முடியாத சங்கையா குடும்பத்தை குணசேகரன் காந்தியிடம் அழைத்து சென்று கொத்தடிமை வேலைக்கு சேர்த்துள்ளார்.

பின்னர் காந்தி அவர்களிடம் கொடுத்த பணத்தை கழிப்பதற்கு சங்கையா குடும்பத்தை காட்டு குடியிருப்பில் சலவைத் தொழில் செய்வதற்கும், ஆடு மேய்ப்பதற்கும் பல மாதங்களாக சம்பளமின்றி கொத்தடிமையாக வேலை வாங்கியுள்ளார். இதுகுறித்து சிப்காட் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு சென்று சங்கையாவின் குடும்பத்தை பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் குணசேகரன் மற்றும் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துவிட்டனர். மேலும் மீட்கப்பட்ட சங்கையா குடும்பத்திற்கு தங்குவதற்கான வீடு மற்றும் தொழிலை தொடங்குவதற்காக சலவை பெட்டி போன்றவற்றை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |