Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. புகார் தெரிவிக்க உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கு தளர்வுகள்வழங்கப்படுவதில் கோயில்கள் திறப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்கள் குறித்து பக்தர்கள் 044-28339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை குறைகள் தொடர்பான நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |