ஆஸ்திரேலியாவில் சிட்னியை சுற்றியிருக்கும் வட்டாரங்களில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில், புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பரவி வருகிறது. எனவே அதிகாரிகள், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று சுமார் 22 நபர்களுக்கு புதிதாக டெல்டா வகை தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இன்று நள்ளிரவிலிருந்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி, உடற்பயிற்சி மையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை வென்ற நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அங்கு சுமார் 30,000 நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதில் 910 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.