ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 6 ஆசிரியர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியரான ஹபீப் முகம்மது என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அடிப்படையிலும், அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பள்ளியில் பணிபுரியும் மேலும் 6 ஆசிரியர்களை பிடித்து குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் தலைமையில் போலீசார் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஹபீப் முகம்மது வகுப்பில் படிக்கும் 20 மேற்பட்ட மாணவிகளை ரகசிய இடத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.