Categories
தேசிய செய்திகள்

கங்கை நதியில் நீர்மட்டம் உயர உயர… “மீண்டும் மிதக்கும் இறந்தவர்களின் உடல்கள்”… அச்சத்தில் மக்கள்…!!!!

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் புதைக்கப்பட்ட உடல்கள் நதியில் மிதக்க ஆரம்பித்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் ஏராளமான உடல்கள் கங்கை நதியில் மிதந்து வந்தது. இது மிகவும் சர்ச்சையான நிலையில் கங்கையில் குழு அமைக்கப்பட்டு இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு, தகனம் செய்வதற்கு இடம் இல்லாத காரணத்தினால் கங்கையில் உடல்கள் வீசப்பட்டு சென்றது தெரியவந்தது.

பின்னர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு உடல்கள் மிதந்து வருவது தடுக்கப்பட்டது. தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் கங்கை நதியில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கரையோரத்தில் புதைக்கப்பட்ட உடல்கள் மறுபடியும் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துள்ளது. இன்று மட்டும் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள நதியோரத்தில் ஏராளமான உடல்கள் மிதந்து வருகின்றது. இதனால் பிரயாக்ராஜ் மாநகராட்சி மண்டல அதிகாரி இந்த உடல்களை அப்புறப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.

Categories

Tech |