Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்காக வைத்திருந்தது… அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மடிக்கணினி காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் மாணாக்கர்களுக்கு வழங்குவதற்காக 35 மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வேதியியல் ஆய்வகத்திற்கு கண்காணிக்க சென்ற தலைமை ஆசிரியர் மலையப்பன் அங்கு வைக்கப்பட்டிருந்த 35 மடிக்கணினிகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் நாகுடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மடிக்கணினியை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |