அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் விஷால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஷெரின், திஷா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு விஷால் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்கிய கடைக்காரர்கள் அதற்குரிய பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 10 நாட்களாக பணத்தை கேட்டு விஷாலுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷால் தனது மனைவி மற்றும் மகள்களுடன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.