Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வலி நிவாரணி மாத்திரைகளை வைத்து… மாணவர்களை குறிவைக்கும் கும்பல்… கோவையில் பரபரப்பு…!!

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வலி நிவாரணி மற்றும் மயக்கத்திற்கு பயன்படுத்தும் டைடல் டெபென்டல் என்ற மாத்திரைகளை ஒரு கும்பல் போதைக்காக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சாய் பாபா காலனி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஜானகிராமன், கபிலேஷ், பார்த்திபன் மற்றும் முகமது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 650 வலி நிவாரணி மாத்திரைகள், 12,000 ரூபாய் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கும்பல் கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களிடம் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். இதனை தண்ணீரில் கலந்து போதைக்காக பயன்படுத்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |