இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 11 மாத பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சந்தியா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரின் வயிற்று வலி குணமடையாததால் மன உளைச்சலில் இருந்த சந்தியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.