Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. மொத்தமாக 23 ராணுவ வீரர்கள்…. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்….!!

சுமார் 23 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியிலிருந்து வழக்கமான பயிற்சியை செய்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்றில் சுமார் 23 ராணுவ வீரர்கள் புறப்பட்டு சென்றுள்ளார்கள். இவ்வாறு 23 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் நைரோபியின் புறநகர் பகுதியில் பறந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தினால் அதில் பயணம் செய்த 23 ராணுவ வீரர்களில் சுமார் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |