சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு சிறப்புரை கூறி பாடப்புத்தகங்களையும் வழங்கினார். இதனையடுத்து அவர் கணிதப்பாட புத்தகத்திலிருந்து சில கேள்விகளை கரும்பலகையில் எழுதி மாணவிகளிடம் கேட்டுள்ளார்.
ஆனால் எந்த மாணவிகளுக்கும் இதற்கான பதில் தெரியாத காரணத்தால் அவரே ஆசிரியராக மாறி மாணவிகளுக்கு பாடங்களை நடத்தினார். இந்நிகழ்வு அங்குள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழாவில் மாவட்ட ஆட்சியருடன் முதன்மை கல்வி அலுவலர், கல்வி அலுவலர், பள்ளி கல்வி துறை ஆய்வாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்.