புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகளை ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கட்டிடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் கட்டுமான பணியை தரமான கட்டவும், கட்டிட பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு , இரத்த சேமிப்பு வங்கி ஆகியவற்றை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இவருடன் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.