நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள வசந்த முல்லை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாம்புச்சட்டை, உறுமீன், திருட்டுப்பயலே-2 போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார் . தற்போது இயக்குனர் ரமணன் புருஷோதமா இயக்கத்தில் பாபி சிம்ஹா வசந்த முல்லை என்ற படத்தில் நடித்துள்ளார்.
It's time for y'all to witness it The teaser of #VasanthaMullai (Tamil), #VasanthaKokila (Telugu & Kannada) is out now ! 😎💥
👉🏻 https://t.co/YR1Qy0i2cs@Ramanan_offl @kashmira_9 @itsRamTalluri @ReshmiMenonK @RajeshMRadio @SRTmovies @MffProductions @thinkmusicindia
— Simha (@actorsimha) June 25, 2021
இந்த படத்தில் காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வசந்த கோகிலா என்ற டைட்டிலில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் வசந்த முல்லை படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது.