தமிழகத்தில் திரையரங்கு பராமரிப்பு பணிக்கு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.
இதில் திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளியில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா PTPCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம். திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.