தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மீண்டும் சிக்கலை சந்தித்ததால் ரிலீஸ் தேதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல் ராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் , படத்தை ரிலீஸ் செய்வதில் பல தடைகள் ஏற்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக “என்னை நோக்கி பாயும் தோட்டா” வின் படக்குழுவினர் மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் மற்ற படக்குழுவினறுடன் ஆலோசிக்காமல் திடீரென தனிப்பட்ட முடிவாக செப்டம்பர் 6 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தது. இதனால் இந்த படம் வெளியாகக் கூடாது என பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதில் படத்தை இயக்கிய இயக்குனரறுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருப்பதாக கூறி ஒருபுறம் வழக்கு தொடுத்தநிலையில், மறுபுறம் பிச்சைக்காரன் பட இயக்குனரின் அடுத்த படமான சிகப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் ஏற்கனவே செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு போட்டியாக எந்த ஒரு அறிவிப்புமின்றி “என்னை நோக்கி பாயும் தோட்டா” படம் வெளியாகும் என அறிவித்ததால் சிகப்பு மஞ்சள் பச்சை படக்குழுவினர் வேதனை அடைந்தனர்.
ஆகையால் சிகப்பு மஞ்சள் பச்சை படக்குழுவினரும் புகார் அளித்தனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நாளை வெளியாவதற்கு தடை விதித்தும், தேதியை தள்ளி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், என்னை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸ் ஆகாததால் நாளை சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.