தேனி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சீலையம்பட்டி பகுதியில் முனியப்பன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துமாரி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்திலும், குழந்தை இல்லாத காரணத்தாலும் மிகவும் மனமுடைந்த முனியப்பன் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து முனியப்பன் நேற்று மது அருந்திவிட்டு போதையில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து சீலையம்பட்டியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் எறியுள்ளார்.
இந்நிலையில் 150 அடி உயரம் கொண்ட செல்போன் டவரின் உச்சிக்கு சென்ற முனியப்பன் கீழே குதிக்க போவதாக சத்தம் போட்டு கூறியுள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தது அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளார். ஆனால் முனியப்பன் கேட்காத நிலையில் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முனியப்பன் இடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை 2 1/2 மணி நேரம் நீடித்த நிலையில் அவர் கீழே இறங்காமல் இருந்துள்ளனர்.
மேலும் அங்கிருந்த தீயணைப்பு வீரர் முருகன் முனியப்பனிடம் பேசிக்கொண்ட செல்போன் டவர் மீது எறியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் முனியப்பன் கீழே இறங்குவதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் கீழே இறங்க முடியாமல் தவித்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை கயிறு மூலம் கீழே இறக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் முனியப்பனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் அவரிடம் விசாரித்ததில் மனைவி இறந்த சோகத்திலும் அவர் தங்கியிருந்த வீடு இடிந்து விழுந்த நிலையில் மன உளைச்சலில் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் போலீசார் இனிமேல் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.