Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதற வைக்கும் காட்சி… மீட்கப்பட்ட கர்ப்பிணியின் உடல்… விருதுநகரில் நடந்த கோர விபத்து…!!

பட்டாசு விபத்தில் பலியான கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகம் 4 தினங்களுக்கும் பின் மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயின்பட்டி ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பட்டாசு வெடித்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சூரியா, செல்வராணி, கற்பகவல்லி மற்றும் 5 வயது சிறுவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யா, செல்வராணி மற்றும் 5 வயது சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் இறந்தவர்களின் உடலை ஒப்படைத்தனர். ஆனால் நான்கு மாத கர்ப்பிணிப் பெணான கற்பகவல்லியின் உடல் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் மரத்திலுள்ள கிளை, மின் வயரில், சாலை போன்ற இடங்களில் இருந்து சித்திய உடல் பாகங்களை  கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் அந்த கர்ப்பிணி பெண்ணின் மீதமுள்ள உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது கற்பகவள்ளியின் உடல் பாகங்கள் வேலி காட்டு பகுதியில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். அந்த உடல் பாகத்தை மீட்டெடுத்த காவல்துறையினர் ஊர்மக்கள் முன்னிலையில் எரித்துள்ளனர்.

Categories

Tech |