Categories
மாநில செய்திகள்

ஹார்டுவேர், புத்தகக் கடைகள் இயங்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தற்போது வெளியிட்டுள்ள தளர்வுகளில் ஹார்டுவேர், புத்தகக் கடைகள் இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, பின்னர் தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் உடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில், ஹார்ட்வேர், புத்தக கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பாத்திரக் கடைகள், பேன்ஸி அழகுசாதன பொருட்கள், போட்டோ, வீடியோ, சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |