Categories
சினிமா தமிழ் சினிமா

‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

அயலான் படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் டாக்டர், அயலான், டான் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சையின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள அயலான் படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

 

 

New pic inside] Rakul Preet Singh and Sivakarthikeyan resume shooting for  Ayalaan - details inside

மேலும் ஆர்.டி.ராஜா மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அயலான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மினரல் வாட்டர் விநியோகிப்பவராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ‌

Categories

Tech |