கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சீனாவின் ஷென்சென் நகரிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, பிரேசில் என பல நாடுகளும் கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சீனாவில் மட்டும் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது அங்கு மீண்டும் வேகமெடுத்து பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் உள்ள காங்டாங் மாகாணத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தலைநகர் பெய்ஜிங்கிற்கு ஷென்சென் நகரிலிருந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சீனாவில் உள்ள பிற பகுதிகளுக்கு மட்டும் விமான சேவை தொடர்ந்து இயக்கப்படுகிறது. மேலும் ஜூலை 1-ஆம் தேதி வரை இந்த தடை தொடரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.