தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.