நடிகை ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரைசா. இதையடுத்து இவர் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் காதலிக்க நேரமில்லை, எஃப்.ஐ.ஆர், தி சேஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
https://twitter.com/raizawilson/status/1408380447155908608
மேலும் ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்நிலையில் ரைசா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நான் தனிமையில் இருப்பதை வெறுக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ‘கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம், நானும் சிங்கிள் தான்’ என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.