சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து முன்னதாக அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகளை ஓபிஎஸ் – இபிஎஸ் நீக்கி உத்தரவிட்டனர். இந்நிலையில் மேலும் சசிகலாவிடம் பேசியதாக கூறி அதிமுக நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கினர்.
இந்நிலையில் சசிகலாவுடன் பேசியதாக கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் புதிய திருப்பமாக திமுகவில் இணைந்தனர். திமுக விலிருந்து நீக்கப்பட்ட மாநிலத் துணைச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், டேவிட் செல்வன், கோபி நகர செயலாளர் காளியப்பன் உள்ளிட்ட 20 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.