Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முட்டை லாரியில்…பதுக்கி கொண்டுவந்த நபர்… போலீசாரிடம் வசமாக சிக்கியவர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடை திறக்கப்படாத நிலையில் சிலர் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்த அதிக விலைக்கு விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த முட்டை லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த லாரியில் 48 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏழூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பதும், பெங்களூரிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்ததுள்ளது. மேலும் உடனடியாக காவல்துறையினர் சேகரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |