தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி, பிரைமரி,தொடக்கப் பள்ளிகளை மூட பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள அவகாசம் வழங்கியும், பள்ளிகள் அலட்சியம் காட்டியதால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.