ஐக்கிய அரபு நாட்டில் முதல் முறையாக சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி வந்த அலி ஷம்சி என்பவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவரது சிறுநீரகத்தை வெட்டி வெளியே எடுத்த கட்டியை அகற்றி விட்டு மீண்டும் சிறுநீரகத்தை பொருத்தி செயல்பட வைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை 11 மணி நேரம் நடைபெற்றுள்ளது. 60 வயதாகும் அவர் பிறக்கும்போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்படி ஒரு அறுவை சிகிச்சை எங்கும் நடந்ததில்லை. மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளனர்.
Categories