தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் மூன்று வகையாக மாவட்டங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா ப்ளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் சென்னை, காஞ்சி மற்றும் மதுரையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். டெல்டா ப்ளஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைக்கும் தன்மை கொண்டது. பரிசோதனை, தனிமைப் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது.