தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2019 ஜனவரி 22 முதல் 30-ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை அளிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பணியாளர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெற ஏதுவாக விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.