மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் 6 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் ஷரத்துகள் ஆட்சேபத்துக்கு உரிய வகையில் இருந்தால் அரசு அதற்கு தீர்வு காண தயாராக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தியுள்ளார்.