மாநில அரசின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டபட்டுள்ளது. 50 கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது :
இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பம் :
ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் ஆகஸ்ட் 19_ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 20_ஆம் தேதி என வரையறுக்கப்பட்டுள்ளது.
தேர்வு மற்றும் கட்டணம் :
இந்த பணிக்கு தேர்வு எழுத விண்ணப்பிக்கும் அனைவரும் ரூபாய் 650 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.சிஎஸ்டி மற்றும் எஸ்சி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு நாள் : விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு 24.11.2019_ஆம் தேதி தேர்வு நடைபெறுகின்றது.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வலைத்தளத்தை பயன்படுத்தவும். www.drbkrishnagiri.net