ஆன்லைன் மூலம் ஜிஎஸ்டி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான ஆவணங்கள்:
பான் கார்டு
ஆதார் கார்டு
வங்கி பாஸ்புக்
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் gst.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில் Services> registration > New registration ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும்.
அப்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கிடைக்கும் அதை நிரப்பி சப்மிட் கொடுக்கவேண்டும். தொடர்ந்து உங்களது மெயில் ஐடிக்கு Temporary Reference Number வரும்.
பின்னர் மீண்டும் இதே இணையதளத்தில் New registration ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அதில் உங்களுக்கு கிடைத்திருக்கும் Temporary Reference Numberஐக் கொடுக்கவேண்டும்.
பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் ஒடிபிஐக் கொடுத்து proceed ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும்.
அடுத்து Draft -ல் Statusஐ அடுத்துள்ள Optionஐ கிளிக் செய்தால் ஒரு புதிய Page Open ஆகும். அதில் Business Detailஐ பதிவு செய்து Save & Continue கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் Promoter அல்லது Partner எனவிருக்கும் இரண்டாம் படிகளில் உங்களின் தனிப்பட்ட விபரத்தை பதிவு செய்து Submit கொடுக்கவேண்டும்.
பின்பு Authorised Signatory-ல் Save & Continue கொடுக்க வேண்டும். பின் Authorised Representative-ல் Yes or No தேர்வு செய்து Continue கொடுக்க வேண்டும்.
Principal place of business-ல் Form பதிவு செய்து Save & Continue கொடுக்க வேண்டும், பின்னர் Additional Business-ல் Continue கொடுக்க வேண்டும்.
அடுத்து HSN Number-ஐ GST Website-ல் பதிவு செய்து Save & Continue கொடுக்க வேண்டும். பின் Detail of Bank Account-ல் உங்களது தகவல்களைப் படிவு செய்து Continue கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் State Specific Information Page -ல் Form Fill செய்து Save & Continue கொடுக்க வேண்டும். பின்னர் Verification கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து உங்களது E-Sign ஐ உறுதிபடுத்த OTP மூலம் Verification செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களாது ஜிஎஸ்டி பதிவாகிவிட்டதா என்பதும் உறுதிப்படுத்தப்படும்.