கொரோனா தொற்று பாதிப்பினால் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத்தெரு பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் மாரிமுத்துவின் மகன் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு மாரிமுத்து மற்றும் இந்திராணி ஆகிய 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாரிமுத்து மற்றும் இந்திராணியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் மாரிமுத்துவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் இரவு நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்திராணிற்கும் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் காலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து கணவன் மனைவி இருவரின் உடல்களை பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் கொரோனா விதிமுறையின்படி அடக்கம் செய்துவிட்டனர்.