Categories
மாநில செய்திகள்

ஆளுநராக தமிழிசை பதவியேற்கும் நிகழ்ச்சி…. துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு.!!

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கிறார். 

கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர் தமிழிசை சௌந்தரராஜன்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மகளான தமிழிசை கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா உட்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநரை நியமனம் செய்து உத்தரவிட்டார். இதில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Image result for tamilisai

அதன் பின் தமிழக பாஜக தலைவர் மற்றும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08ம்  தேதி ஆளுநராக பதவியேற்கிறார். இவரது பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for tamilisai panneerselvam

இந்நிலையில் தெலங்கான ஆளுநராக நாளை மறுநாள் தமிழிசை பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு செல்கிறார்.

Categories

Tech |