Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களால நடக்க முடியல… பெண்களின் போராட்டம்… சிவகங்கையில் பரபரப்பு…!!

பெண்கள் இணைந்து யூனியன் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதில் இருக்கும்  யூனியன் அலுவலகத்தில் முன்பு 100 பெண்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டாரம் வளர்ச்சி அலுவலர் லெட்சுமண ராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் நாங்கள் லட்சுமிபுரம், சங்கம்பட்டி, மணப்பட்டி, கக்கினாம்பட்டி மற்றும் கோனார் பட்டியில் பகுதியில் வசித்து வருகின்றோம் என்றும், நாங்கள் 100 பேரும் இணைந்து அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை பராமரித்து வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நாங்கள் கோனார் பட்டியில் அமைந்துள்ள கண்மாய் பகுதியில் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது ஊராட்சி மன்ற தலைவர் சென்று நீங்கள் அனைவரும் இனிமேல் இங்கு வேலை செய்யாமல் கிளாதரி பகுதியில் அமைந்துள்ள கண்மாய்க்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கினால் பேருந்து வசதி இல்லாமல்  தினமும்  எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வேலை பார்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்று வேதனையுடன்  தெரிவித்துள்ளனர். இதனால் நாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் எங்களுக்கு வேலை தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்  என்று தெரிவித்து,  அந்த மனுவை வட்டாட்சி வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி இதற்குரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |