பிரபல WWE வீராங்கனை மெலிசா கோட்ஸ் காலமானார். இவருக்கு வயது 50. தனது வாழ்க்கையை உடற்பயிற்சி துறையில் இயங்கி வந்த மெலிசா 2002ஆம் ஆண்டு முதல் தனது மல்யுத்த வாழ்க்கையை தொடங்கினார். 2005ஆம் ஆண்டு முதல் WWE- இல் பங்கேற்றார். உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories