Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கு மாஸ்க் அணியாமல் வந்தவரை…. காவலாளி சுட்டதால் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் முக்கிய பகுதியாக முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரேலி ஜங்ஷனில் ராஜேஷ் குமார் என்பவர் முக கவசம் அணியாமல் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அங்கிருந்த காவலாளி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவலாளி தன் துப்பாக்கியை எடுத்து ராஜேஷ்குமாரை சுட்டுள்ளார். அவர் சுருண்டு விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |