Categories
உலக செய்திகள்

மியாமி கட்டட விபத்து: 159 பேர் நிலைமை என்ன…??

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரை அருகே 12 மாடிக் குடியிருப்பு கட்டிடம் திடீரென சீட்டு கட்டுபோல சரிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டதையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை சிறுவன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மேலும் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 100க்கு மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 4 பேர் பலியான நிலையில் 159 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை என்று மேயர் டேனியல்லா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |