ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அதிகாலை 4.34 மணி அளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல் நகரின் வடக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய நிலநடுக்கவியல் மையம் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, கட்டிடங்களுக்கு லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.