Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. 

தமிழக அரசு சமீபத்தில் பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து முனி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலின் விலை உயர்வால் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று பொதுநல வழக்கு தொடுத்தார்.

Image result for ஆவின் பால்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள் உரிய ஆதாரமின்றி வழக்கு தொடர்ந்தது ஏன் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து உரிய ஆதாரமின்றி தொடரப்பட்ட ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Categories

Tech |