Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க எப்படி வந்துச்சு… பார்த்ததும் பதறிய ஆசிரியர்… தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

மொபட்டில் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்துவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னகலயம்புத்தூர் பகுதியில் பள்ளி ஆசிரியரான ராஜாமணி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் ராஜாமணி தனது மொபட்டை வீட்டின் முன் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். இதனை அடுத்து அந்த மொபட்டில் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது.

இதனை கண்ட ராஜாமணி பதறியவாறு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மொபட்டில் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து விட்டனர். அதன்பிறகு அந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

Categories

Tech |