Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பதுக்கப்பட்ட ரேஷன் அரிசி…. வசமாக சிக்கிய பெண்…. கைது செய்த காவல்துறை….!!

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள தூம்பக்குளம் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் அரிசியை வாங்கி செல்கின்றனர். அவர்களிடமிருந்து சிலர் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தாசில்தாருக்கு புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் தூம்பக்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் கல்லக்குடி தாசில்தார் திருமலை சோதனை மேற்கொண்டார்.

இந்த சோதனையில் அந்த கிராமத்தில் வசிக்கும் முனீஸ்வரி என்பவரது வீட்டில் 13 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் முனீஸ்வரி இந்த ரேஷன் அரிசியை கூடுதல் விலைக்கு மாடுகளின் தீவனத்திற்காக விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முனீஸ்வரி கைது செய்து அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூடைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |