Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைக்கு பணம் சேர்க்கணுமா….? அப்ப இந்த திட்டத்தில்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் இணைந்து  பயன்அடைந்து வருகின்றனர். மக்களிடையே இது ஒரு நம்பிக்கை பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. பெண்குழந்தைகளின் திருமணத்திற்கான பணம் சேர்க்கும் பெற்றோருக்கு எல்ஐசி நிறுவனம் ஒரு  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பெயர் கன்யாதான் பாலிசி திட்டம்.

இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தினமும் 130 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அதாவது வருடத்திற்கு 47 ,450 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். பாலிசி காலத்தில் முதல் 3 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். இதையடுத்து 25 வருடங்களுக்குப் பிறகு 27 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இதில் முதலீடு செய்ய விரும்புவர்கள் குறைந்தபட்சம் 30 வயது அவர்களின் மகள் ஒரு வயதைக் கடந்திருக்க வேண்டும்.

5 லட்சம் ரூபாய் உறுதித் தொகைக்கு பாலிசி எடுத்தால் 22 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது மாதத்திற்கு ரூ.1,951 பிரீமியம் செலுத்த வேண்டும். கடைசியில் உங்களுக்கு  தோராயமாக 13.37 லட்சம் ரூபாய் கிடைக்கும்.  10 லட்சம் ரூபாய் உறுதி தொகைக்கு பாலிசி எடுத்தால் 25 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். மாதம் 3,901 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். கடைசியில் 26.75 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

Categories

Tech |