77 நாடுகள் கணக்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதில், சுமார் 42 சதவீத மக்களிடம் போதைப் பொருட்களின் பயன்பாடு புதிதாக ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
போதைப்பொருட்களினுடைய பயன்பாடு கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொரோனா காலத்தில் 4 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது 77 நாடுகள் கணக்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதில், சுமார் 42 சதவீத மக்கள் புதிதாக போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளார்கள்.
இதனையடுத்து கடந்த 2010 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையே போதைப் பொருட்களை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் உயர்ந்துள்ளது இந்த நிலை தொடர்ந்து நிலவிக் கொண்டு வந்தால், சர்வதேச அளவில் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் 11 சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும் சர்வதேச அளவில் சுமார் 1.1 கோடி பேர் ஊசியின் மூலம் போதைப் பொருட்களை தங்களுக்குள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் 50% பேர் ஹெபடைட்டிஸ் சி என்னும் வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அதிர்ச்சி தகவலை ஐ.நாவினுடைய போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.