Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

18 கோவில்களின் முன்பு… சூடம் ஏற்றி போராட்டம்… இந்து முன்னணி சங்கம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணியினர் கோவில்களை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் காட்டு பிள்ளையார் கோவில், இராமநாதசுவாமி கோவில், சந்தனமாரியம்மன் கோவில், உச்சிப்புளி சந்தனமாரியம்மன் கோவில், பரமக்குடி திரௌபதி அம்மன் கோவில், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில், சாயல்குடி கைலாசநாதர் கோவில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவில், திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், மாரியூர் பூவேந்தி நாதர் கோவில், பரமக்குடி கோதண்டராமர் கோவில், நயினார்கோவில் நாகநாதர் கோவில், என்.மங்கலம் சொர்ணகாளீஸ்வரர் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், திருவாடானை கட்டிவயல் சிவன் கோவில் உள்ளிட்ட 18 கோவில்களில் முன் நின்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவிலின் முன்பு சூடத்தை ஏற்றி வைத்து டாஸ்மார்க்கை திறந்த தமிழக அரசு கோவில்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ராமநாதபுரம் நகர் தலைவர் பாலமுருகன், நகர பொது செயலாளர் கார்த்திக், நகர தலைவர் நாராயணன், நகர துணைத் தலைவர் சண்முகம்,  இந்து இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் பரணிதரன், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |