ஜெர்மனியில் மர்ம நபர் திடீரென்று மிகப்பெரிய கத்தியை பயன்படுத்தி அங்கிருக்கும் பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டில் Wurzburg என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்குள் மர்ம நபர் ஒருவர் முகக் கவசம் அணிந்து கொண்டு, கையில் மிகப் பெரிய கத்தியுடன் புகுந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருக்கும் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்ததில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
இதற்கிடையே மர்ம நபரின் இந்த வெறிச் செயலை கண்டு அங்கிருக்கும் பொதுமக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்குமிங்கும் ஓடியுள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினரையும் அந்த மர்மநபர் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அந்த மர்ம நபரின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின் அந்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.