தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஜூலை-5 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் திங்கள்கிழமை முதல் கோவில்கள் திறக்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் கோவில் பணியாளர்களுக்கு சிறப்பு கொரோனா பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பணியாளர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.